செல்களை நிரப்பும் கடைசி சொட்டு துரோகமும்,
இருத்தலை உணர்த்தும் கூடுகளற்ற பறவைகளும்,
பிசுபிசுப்புகள் அடர்ந்திருக்கும் பின்னிரவுகளும்,
நிறமிழந்த பூக்களுக்கு தடவப்படும் வண்ணத்துப்பூச்சியின் சாயல்களும்.
வானில் பூக்கும் நட்சத்திரங்களும் (நம்புங்கள் வானில் தான் நட்சத்திரங்கள் பூக்கின்றன),
வலசை போதல்களும்,
முகம் தெரியாதவர்களின் இறுதி ஊர்வலங்களும்,
ஒளியை விழுங்கும் இருளும்,
உப்பு தோய்த்த கண்களும்,
சிறகொடித்து பிச்சையெடுக்கும் பௌத்த கடவுளும்,
பூஞ்சை பூத்த காலி தேநீர் கோப்பைகளும்,
பூக்கோவும், வான்காவும்,
தேவக்குமாரன்களும் சாத்தான்களும்,
முக்கியமாக அந்த ஒற்றைக் கண் பூனையும்
பொறுங்கள், ஆஹச் சிறந்த கவிதை ஒன்று தயாராகிக் கொண்டிருக்கிறது !
இப்படி ஒரு கவிதை கிடைக்கும் என்றால் துரோகம் செய்வதை கவுரமாக நினைத்து துரோகங்கள் செய்து கொண்டே இருக்கலாமே :)
ReplyDeleteஅருமை .கூடிய விரைவில் எழுதிவிடுங்கள் ஆகச்சிறந்த கவிதையை
ReplyDelete