உடம்பு கனமே இல்லாது காற்றில் மிதப்பது போல் இருந்தது . உண்மையிலுமே இறந்து விட்டோமா ? கடைசியில் ஒரு முறை கூட ஆதியை பார்க்க முடியவில்லையே … அவன் குரலை கூட கேட்க முடியாத தண்டனையை காதல் அவளுக்கு அளித்து விட்டதோ. கண்ணீர் இறங்கி தாடையை நோக்கி ஓடுகையில் திராவகம் போல் சுட்டது
கண்ணை கொஞ்சம் திறங்க.. இங்க பாருங்க .. இங்க பாருங்க .. நான் பேசுறது கேக்குதா… கண்ணை நல்ல திறந்து பாருங்க…
அரைகுறையாய் தெரிந்த மங்கலான முகத்திடம்.. “வலிக்..குது.. இத எடுங்க”… என்று அடி தொண்டையை துருத்திக்கொண்டிருந்த குழாய் ஒன்றை சுட்டினாள்.
“சரி சரி எடுதரலாம். கொஞ்சம் நேரம் இருக்கட்டும். நீங்கலாம் கொஞ்ச நேரம் வெளிய இருங்க.” கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் குரல்கள் ஒலித்தன.
நினைவு திரும்பியபொழுது பாதி கண்களையே திறக்க முடிந்தது அதுல்யாவிற்கு. மங்கலாக தெரிந்த எல்லாம் அவளுக்கு ஒரு அச்சத்தை கொடுத்தாலும். தொண்டையில் துருத்திக்கொண்டிருந்த ஏதோ ஒன்று இன்னமும் அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என்பதை உணர்த்தியது.
கண்கள் அறை முழுதும் சுழன்றது.. ஒருவரும் அருகில் இல்லை , சற்று தொலைவில் வெள்ளை உடை உடுத்திய ஒருத்தி தான் தெரிந்தாள். சற்று பின்புறம் திரும்பியவாறு இருந்தமையால் அதுல்யா அவளை நோக்கி கை அசைத்தது அவளுக்கு தெரியவில்லை.
“அதுல்யா ” குரலை கேட்டவுடன் பக்கவாட்டில் திரும்பிய அவள் அவனை கண்டதும் பெருங்குரலெடுத்து அழ முயற்சித்து முடியாதது போல தாரை தரையை கண்ணீரை உகுந்தாள்.
“ஷ்ஷ் .. அழாதடா …” என்று கூறியவன் கண்ணிலும் வெள்ளம் பெருகிற்று.
“வலிக்குது டா.. எடுக்க சொல்லு டா … ” திணறினாள் அதுல்யா
“வலிக்குது டா.. எடுக்க சொல்லு டா … ” திணறினாள் அதுல்யா
“ஏன்டா இப்படி பண்ணின” … அழுகையுனூடே வார்த்தைகள் சிதறியது ஆதிக்கு. பின் சமாளித்து அழுகையை நிறுத்தியவன். செவிலியை அழைத்து ஏதோ கூறினான்.
பின் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு. அவளை நோக்கி “படிச்சவங்களே இப்படி பண்ணலாமா மா ? என்ன பொண்ணுமா நீ ? பல்ஸ் ரேட் 17 க்கு வந்துடுச்சு. எல்லாரும் எப்படி தவிச்சு போய்ட்டாங்க தெரியுமா ? ஏதோ தெய்வம் தான் காப்பாத்துச்சு …” , இன்னும் டாக்டர் ஏதேதோ பேசிக்கொண்டே போக அதுல்யா மெல்ல ஆதியை நோக்கி திரும்பி “நம்ம காதல் தான் என்னை காப்பாத்துச்சு.. இல்லனா நான் …”
மேல அவளை பேச விடாமல் அவள் வாயை மூடினான் ஆதி
“என்ன நினைச்சுடி இப்படி பண்ணின …”
“என்ன நினைச்சுடி இப்படி பண்ணின …”
“உன் கல்யாணம் ”
“அடி அசடே .. நீ இல்லாம யார்கூட என்னக்கு கல்யாணம் ?”
“…” அதுல்யா மௌனமாய் இருக்க ஆதி தொடர்ந்தான்
“அடி அசடே .. நீ இல்லாம யார்கூட என்னக்கு கல்யாணம் ?”
“…” அதுல்யா மௌனமாய் இருக்க ஆதி தொடர்ந்தான்
“இவ்வளவு தான் என்மேல நம்பிக்கை… ? அது என் பிரெண்ட்ஸ் நாம இப்படி இருக்கறது பாத்து அப்படியாச்சு நாம சேர்ந்துடுவோம்ங்கற நம்பிக்கைல பண்ணி இருக்காங்க..அந்த எண்ணம் கூட உனக்கு இல்லையாடி ”
“…”
“…”
“என்ன நினைப்புல தான் இப்படி பண்ணின ? நீ செத்து போய்ட்டா.. நான் மட்டும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருப்பேன் நு நெனைச்சியா ..”
” இல்ல செத்து.. போய்… ஆவியா வந்த்.. து உன்னை..யும் கொன்னு ..டலாம்னு நினைச்சேன்..” சொல்லி விட்டு அதுல்யா முறுவலித்தாள்.
” இல்ல செத்து.. போய்… ஆவியா வந்த்.. து உன்னை..யும் கொன்னு ..டலாம்னு நினைச்சேன்..” சொல்லி விட்டு அதுல்யா முறுவலித்தாள்.
“அப்பாடா அப்பவாது என்னை உன்கூட கூட்டிகிட்டு போகணும்னு தோணுச்சே”
“இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்”
“இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேன்”
“நான் மட்டும் உன்னை போக விட்டுடுவேன்னு நினைச்சியா ?”
“அப்போ ஏன்டா முன்னாடி போக விட்ட ?”
“ஏற்கனவே நாம அழுந்த பிடித்து தான் , மூச்சி திணறி போய் கிடந்தது நம் காதல் . இன்னும் அதை படுத்தி எடுத்தால் எங்கே நம் காதல் இறந்து விடுமோ என்று பயந்துதான் கொஞ்சம் விட்டு பிடித்தேன் ”
“..”
“அப்போ ஏன்டா முன்னாடி போக விட்ட ?”
“ஏற்கனவே நாம அழுந்த பிடித்து தான் , மூச்சி திணறி போய் கிடந்தது நம் காதல் . இன்னும் அதை படுத்தி எடுத்தால் எங்கே நம் காதல் இறந்து விடுமோ என்று பயந்துதான் கொஞ்சம் விட்டு பிடித்தேன் ”
“..”
“இந்த காதல் நம்மை வாழ வைத்ததுக்கு நன்றியாக , இனி நம் வாழ்நாள் முழுதும் இந்த காதலை குறையாமல் , அழுத்தாமல், வெறுக்காமல் , மறக்காமல் நம்மோடு கூட்டிக்கொண்டே செல்வோம் என சத்தியம் செய் அதுல்யா ”
ஆதியின் கைகளின் மேல் கை வைத்த அதுல்யா கண்களில் இம்முறை வடிந்தது ஆனந்த கண்ணீர் என்பதை சொல்ல தேவை இல்லை.
“எனதருமை காதலியே இது அழுவதற்கான நேரமில்லை ” என்று ஆதி அதுல்யாவின் கண்களில் முத்தமிட்டு அவள் கண்ணீரை துடைத்தான்.
“பின்னே இது என்ன முத்தம் இடுவதற்கான நேரமா ?” புன்சிரிப்புடன் அதுல்யா வினவினாள்.
“ஆம் என் காதல் சகியே, “இது காதல் செய்யும் நேரம்’ ” என்று உச்சி முகர்ந்து, காதல் ஊற்றில் நனைந்து கரைந்துகொண்டிருந்தனர்.
முற்றும்
பி. கு : மொக்க கதையா இருந்தாலும் இதையும் கதை என்று ஏற்றுக்கொண்டு தொடர்ந்து படித்து , இக்கதையை தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கம் அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி







