பூனே, இரவு ஒன்பது மணி,
“ஸ்ஸ்ஸ் எவ்வளோ டிராபிக் “, வியர்த்து வடிந்த முகத்தை துடைத்துக்கொண்டு உள்ளே வந்து தன் ப்ளாட் கதவை அடைத்தாள் அதுல்யா.கீழே சிதறி கிடந்த தபால்களையும், செய்தித்தாளையும் அள்ளி எடுத்த மேசையின் மீது கொண்டு வைத்தாள். முகம் கழுவி உடை மாற்றி விட்டு சோபாவில் அமர்ந்து கடிதங்களை பிரித்தாள். ரெண்டு மூன்று கடிதங்கள் பேங்கில் இருந்து வந்திருந்தது, வேறு யார் இப்பொழுது கடிதமெல்லாம் எழுதுகிறார்கள் என்று சலிப்புடன் மறுபடியும் மேசை மீது எறிந்த பொழுது ஒரு கடிதம் நழுவி கீழே விழுந்தது. ச்சு கொட்டி குனிந்து எடுத்து அந்த கடிதங்களுடன் எறிய சென்ற பொழுது , உரை மேலிருந்த பெயரையும் விலாசத்தையும் கண்டு புருவம் சுருக்கினாள்.
தான் காண்பது உண்மைதானா இல்லை ஏதேனும் பிரமையா என்று குழம்பி போனாள். கண்ணை கசக்கி கொண்டு மறுமுறை பார்த்தாள்.
அனுப்புநர் பெயர் இடத்தில் “ஆதித்யா” என்ற பெயரை கண்டதும் அவள் முகம் மலர்ந்து சற்றென்று சுருங்கியது . கடிதத்தை கிழிக்க முயன்றவள் பின் ஏதோ தோன்றியவளாய் அமைதியாய் மேசை மீது வைத்து விட்டாள். கடிதம் மேசை மீது இருக்க நினைவு பின்னோக்கி சென்றது.
முதன் முதலாக ட்ரைனிங் முடிந்து அவள் ஆதி ப்ராஜெக்ட்டுக்கு மருள மருள விழித்துக்கொண்டு வந்தபொழுது ஆதி அவளிடம் தன்னை மேனேஜர் என்று சொல்லி படுத்தி எடுத்தது, உண்மை தெரிந்த நாளில் அவனை துரத்தி துரத்தி அடித்து நட்பானது , நட்பு கசிந்து காதலானது , போன் பேச்சுக்கள் , கெஞ்சல் கொஞ்சல்கள் , தனியே அவனுடன் கழித்த சந்தோஷ தருணங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்தாள். காலம் தான் எவ்வளோ வேகமாக சென்று விட்டது, ஆயிற்று ஒன்றரை வருடங்கள் அவனை காதலிக்க ஆரம்பித்து என்று நினைக்கும் போதே பெருமூச்சு விட்டாள். இன்னும் அவனை காதலிக்கிறோமா என்ற எண்ணம் தோன்றியபொழுது சட்டென்று தலையில் தானே தட்டிக்கொண்டு இதென்ன மடமையான ஒரு கேள்வி என்று வெக்கினாள்.
ஆமாம் அதுல்யா வாய் பேச்சு தானே ஒழிய அவளுக்கும் ஆதியின் மேல் தீராக் காதல் தான், இருந்தும் தன்மானத்தை கொண்டு தன் காதலை வீணே மறைத்துக்கொண்டு மருகிக்கொண்டு இருக்கிறாள் பேதை பெண்.
ஆதியின் நினைவுகளில் இருந்து சிரமப்பட்டு வெளி வந்தாள். கடிதத்தை பிரிக்க மனம் ஆவல் கொண்டது, இருந்தும் அடக்கிக்கொண்டு விட்டாள். எங்கே படித்தால் மனமுருகி அவனிடம் சரணடைந்து விடுவோம் என்பதை அறிந்தே தவிர்த்தாள். அவனுக்கு இந்த தண்டனை தேவை தான் எப்படி எல்லாம் தன்னை தவிக்க விட்டான் , எவ்வளவு அழுதிருப்பாள் அவனுக்காக, அப்படியேனும் அவள் காதலை அவன் உணரட்டும்.
சரிதான் ! யார் எதை உணர்வது ??
அந்த கடிதத்தை பிரிக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்பதை அதுல்யா அப்பொழுது அறிந்திருக்கவில்லை.
இரண்டு மாதங்கள் சென்றிருக்கும் அந்த கடிதத்தையே மறந்து விட்டிருந்தாள் அதுல்யா. அன்றிரவு, வழக்கம் போல் வந்திருந்த செய்தித்தாள்களை அடுக்கி வைக்க எடுத்தபொழுது அதன் ஊடே சிக்கி கொண்டிருந்த ஒரு மொட மொடப்பான சரிகை வேலைபாடுகள் கொண்ட அட்டையை விடுவித்து பார்த்தாள்.
திருமண பத்திரிக்கை ! யாருடையது ? மணமக்களின் பெயர்களை கண்ட அதுல்யாவிற்கு பூமியே தலை கீழாய் கவிழ்ந்தது போல தலை சுற்றிக்கொண்டு வந்தது.
“ஆதி வெட்ஸ் வீணா ” மீது அதுல்யாவின் கண்ணீர் சொட்டு சொட்டாய் படர்ந்திருந்தது. கையறுந்த நிலையாய் கதறி அழுதாள். சத்தியமாய் அவள் இதை எதிர்பார்க்கவில்லை. கண்ணீரே வற்றி போகும்படி அழுது தீர்த்து விட்டாள். உலகமே இருண்டு விட்டது போல் உணர்தாள். காலம் கடந்து புத்தி வந்து என்ன பயன். தான் என்ன நினைத்து செய்தோம் அது இப்படி எதிர்வினையாய் அமைந்து விட்டதே என்று கலங்கினாள்.
அப்பொழுதும் இல்லை இது கனவு தான் என்று தனக்குத்தானே நம்பிக்கொண்டாள், ஆனால் திருமண பத்திரிக்கை வந்து கண்ணை உறுத்தவே அவளின் மாய எண்ண பிம்பங்கள் உடைந்து நொறுங்கின.
இதை பேசியே தீர்த்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தவளாய் போனை எடுத்து அவனுக்கு டயல் செய்தாள். போனை எடுத்தவுடன் குரல் வராமல் விம்ம தொடங்கினாள்.
கரகரப்பான ஒரு ஆண் குரல் அவளின் விம்மலுக்கு தடை போட்டது
“ஹலோ யாரு ?? ஆதி இல்லைங்களே, பத்திரிக்கை கொடுக்க போனவன் இன்னும் திரும்பவில்லை, போனையும் எடுத்துகிட்டு போகல.. வந்தவுடனே சொல்றேன்”
போனை கடாசி எறிந்து விட்டு துக்கம் பீறிட கதறி அழுதாள். அவன் மேல் அவள் கொண்ட காதல் அப்படி அழுதே கரைந்து போகட்டும் என்பது போல் அழுது தீர்த்தாள். சுயநினைவே இல்லாதது போல் அப்படியே வீற்று கிடந்தாள்.
திடீரென எழுந்து ஏதோ முடிவுக்கு வந்தவள் போல அலமாரியை நோக்கி சென்றாள். எதையோ வெகு நேரம் துழாவி தேடி எடுத்தாள். கையில் க்ளோபிரமின் மாலியேட் சில்வர் சரிகை தாளினுள் மின்னியது.
பிரித்து கையில் அடுக்க துவங்கினாள். பின் தண்ணீரை எடுத்து அதனை விழுங்க துவங்கினாள்
ஒன்று .. இரண்டு … மூன்று …..
நேரம் வரும் காத்திருப்போம்…..

No comments:
Post a Comment