இந்த பகுதி எழுதும் முன் யாரிடமாவது அடுத்த எதிர்பார்ப்பு என்று ஏதாவது இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம் என்று தோன்றியது.. தங்கையிடமே கேட்கலாம் என்று கேட்டால் அவள் “இவங்க ஹோட்டல்ல பேசிக்கிட்டு இருக்கும்போது அங்க வந்த அதுல்யாவோட கணவன் அதுல்யாவையும் ஆதியையும் ஒன்றாக சேர்த்து பார்த்து விட்டான்” என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து விட்டாள். காதல் கதையை கள்ளக்காதல் கதை ஆக்கிடுவா போல இருக்கே!!! இந்த வினையே வேண்டாம். நம்ம கதைக்கே போவோம்.
“இந்த பிரச்சனை எல்லாம் வராம இருக்க ஒரு வழி இருக்கு அதுல்யா”
புருவத்தை சுருக்கியவாறு அதுல்யா ” என்ன வழி?”
“நம்ம லவ்வ உன் நண்பர்கள்கிட்ட சொல்லு”
“அது மட்டும் முடியாது, விடு இப்போ சொல்லலான என்ன?”
“ஆனாலும் இவ்வளோ அழுத்தம் இருக்க கூடாது உனக்கு. பிரெண்ட்ஸ் கிட்ட எப்போவோ சவால் விட்ட லவ் பண்ணமாட்டேன்னு, எனிவேஸ் நீ தோத்துட்டல்ல, தோல்விய ஒத்துகறதுக்கு என்னைக்குமே அசிங்க பட கூடாது டி”
“என்னால அப்படி எல்லாம் அசிங்க பட்டுக்கிட்டு இருக்க முடியாது”
“முடியாது, கூடாது, பிடிக்காது .. ஹ்ம்ம் ….என்னைக்கோ ஒரு நாள் தெரிஞ்சு தானே ஆகணும்”
“அந்த நாள் வரும்போது பாத்துக்கலாம் இப்போ ப்ரீயா விடு” என்று கூறி ச்சு கொட்டினாள்.
சரி இதற்கு மேல் அவளுக்கு பிடிக்காததை பேச வேண்டாம் என்று விட்டுவிட்டான்.
“நாளைக்கு காலைல ஜெய் நகர் பார்க் வந்துடு”
“ஹ்ம்ம் சரி, அப்போ நான் கிளம்புறேன் ”
“இப்படி சட்டுன்னு கிளம்புனா எப்படி ?”
“ஏன் என்ன பண்ணனும்”
“மாமாக்கு ஒரு உம்மா குடுத்துட்டு போறது…” கண்ணடித்தான் ஆதி.
“…”
“அட வெக்க பட கூட தெரியுமா??”
“அது சரி ! சாருக்கு ஆசைய பாரு, ஆசைப்படலாம் தப்பில்லை அதுக்காக இடம் பொருள் ஏவல்லாம் பாக்குறதுஇல்லையா ?”
ஆதி பொம்மைக்கு எங்கும் சிறு குழந்தை பாவத்துடன் முகத்தை சுருக்க
“அச்சோ என்ன நடிப்பு.. நாளைக்கு… ஓகே வா”
அவளின் உதடு சுழிவுகளில் மயங்கி இருந்த ஆதி எந்த பக்கம் தலை அசைத்தான் என்பதை கூட அறிந்திருக்கவில்லை, எந்த பக்கம் திருப்பினாலும் கேட்பது கிடைக்கும் என்பதை அவன் அறிவான்.
ஜெய் நகர் பூங்கா
ஒரு மேடை மீது ஒற்றை காலை மடக்கி உட்கார்ந்து அரசமர இலைகளின் பச்சயத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான் ஆதி. காதுகளில் வழக்கம் போல அவர்கள் இருவருக்கும் பிடித்தமான ”உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ..”
“என்ன இவள இன்னும் காணோம், வரேன் வரேன்னு சொல்றா ஆனா ஆளையே காணோமே ம்ம் ” ஒலிகுவிப்பை கவனம் சிதறடித்து கொண்டிருந்தது…
எங்கு வெளியே சென்றாலும் அவனுக்கு முன்பாக அதுல்யா காத்துக்கொண்டிருப்பது வழக்கம். அவளின் நேரம் தவறாமை அவனை எப்பொழுதும் பெரிதும் ஈர்க்கும். பொண்ணுங்க எப்பவும் கிளம்ப நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்பதெல்லாம் பாட்டி சொல்லும் கதையாகவே அவளுடன் வெளியே செல்லும் தருணங்களில் உணர்திருக்கிறான்.
ஆனால் இன்று .. இன்னும் .. சரி மறுபடியும் போன் செய்து பார்க்கலாம் என்று, பாடலை நிறுத்தி விட்டு, கால் லிஸ்டை எடுத்து டயல் பட்டனை அழுத்த எத்தனித்தபொது…
சோனி எரிக்சன் காலர் டோன் அடிக்க ஆரம்பித்தது.
“இது என்ன புது நம்பர்?” நெற்றியை சுருக்கியவாறு அட்டென்ட் செய்தான்.
“யாரு?”
“…”
“என்ன ?”
“…”
“எங்க.. என்னஆ…”
“…”
“இதோ இப்போ..இப்போ உடனே வரேன்…”
நேரம் வரும் காத்திருப்போம் …..

No comments:
Post a Comment