இந்த இரவை தற்கொலைக்காக தேர்ந்தெடுக்கிறேன், துரோகங்களும் பொய்களும் சில உண்மைகளும் நிறைந்திருக்கும் எல்லா இரவை போன்றதுதான் இந்த இரவும். கற்பனைகளிலேயே சுருக்கிட்டும், மாடியில் இருந்து விழுந்தும், கை நரம்பை அறுத்துக்கொண்டும் அந்த தற்கொலைக்கான ஒத்திகைகளை பார்க்கிறேன். எத்தனை பேர் என்னைப் போல இந்த இரவில் தற்கொலை செய்வார்கள் அல்லது முயல்வார்கள் ?
எல்லாருடைய கிண்ணத்திலும் ஒரு துளி துரோகமாவது கலந்திருக்கும். பாத்திரங்கள் துலக்காமல் சின்கை அடைத்து கிடக்கிறது, எப்படியும் இவை நாளையும் துலக்கப்படாது. பிரிக்கப்படாமல் வைத்திருக்கும் புத்தகங்களை ஒரு முறை நுகர்ந்தாவது பார்க்க வேண்டும். மறக்காமல் வங்கி கணக்கிலிருக்கும் பணத்தை அம்மாவுக்கு அனுப்ப வேண்டும்.
யாருக்காவது குறிப்பு எழுத வேண்டும் ? எல்லா துரோகங்களையும் எழுத முடியாது, அல்லது யாரும் காரணமில்லை என்றாவது எழுத வேண்டும். நெருங்கிய நண்பனுக்கும் மட்டும் குறுஞ்செய்தியில் ஒரு குட்பை அனுப்ப வேண்டும். மிக முக்கியமாக தற்கொலைக்கான அத்தனை காரணங்களும் மறைக்கப்பட வேண்டும்; துரோகங்கள் நிறைந்த அந்த டயரி குறிப்புகளும். என் துரோகங்களை சுமந்தபடி தங்கை அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறாள். நாளை இவள் தான் செய்தி சொல்லியாக வேண்டும், முத்தம் கொடுக்க தோன்றியது.
கடைசியாக ஒரு முறை ஈரக்காற்று உடலை சிலிர்க்க மழையில் நனைந்திட வேண்டும். மொட்டை மாடிக் கதவை திறந்து வெளியே செல்கிறேன். மழையில் கரைந்துவிட முடியுமா... கீழறையில் இன்னமும் யான்னியின் இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. விளக்கை அணைத்துவிட்டு படுக்கிறேன். எனக்கான துரோகங்கள் நாளைக்கும் மிச்சமிருக்கலாம்.