இரவு மணி 9.30
பேருந்தில் இருந்து இறங்கி
வீடு நோக்கி நடக்கையில்….
வெளிச்சமின்றி
இருட்டிகிடக்கும்
தெருக்களையும்…..
அழையா விருந்தாளியென
என்னை பார்த்து குறைக்கும்
நாய்களையும்…
தெரிந்தோ தெரியாமலோ
மேலே இடிக்க வரும்
குடிமகன்களையும்….
முன்னே விட்டு
பின்னே கிண்டல் செய்யும்
ஆட்டோ அண்ணன்களையும்….
ஆங்காங்கே வெறிச்சென
எட்டி பார்க்கும்
பரோட்டா கடை தலைகளையும்…
பயத்துடனே அமைதியாய் கடக்கிறேன்…..
பெண் என்பதால் அல்ல….
தவிப்பாய் காத்திருக்கும்
என் அன்னை முகத்தில்
பத்திரமாய் நான் வந்ததால்
ஏற்படும் நிம்மதியை காணவே……..
பேருந்தில் இருந்து இறங்கி
வீடு நோக்கி நடக்கையில்….
வெளிச்சமின்றி
இருட்டிகிடக்கும்
தெருக்களையும்…..
அழையா விருந்தாளியென
என்னை பார்த்து குறைக்கும்
நாய்களையும்…
தெரிந்தோ தெரியாமலோ
மேலே இடிக்க வரும்
குடிமகன்களையும்….
முன்னே விட்டு
பின்னே கிண்டல் செய்யும்
ஆட்டோ அண்ணன்களையும்….
ஆங்காங்கே வெறிச்சென
எட்டி பார்க்கும்
பரோட்டா கடை தலைகளையும்…
பயத்துடனே அமைதியாய் கடக்கிறேன்…..
பெண் என்பதால் அல்ல….
தவிப்பாய் காத்திருக்கும்
என் அன்னை முகத்தில்
பத்திரமாய் நான் வந்ததால்
ஏற்படும் நிம்மதியை காணவே……..

No comments:
Post a Comment