மறு நாள் ஞாயிறு; அன்று முழுதும் அதுல்யாவின் செல் சுவிட்ச் ஆப் தான். ஆதி மிகவும் தவித்து போய் விட்டான். பலமுறை இந்த மாதிரி நடந்திருக்கிறதுதான் ஆனால் ஒவ்வொருமுறையும் ஆதி நொறுங்கித்தான் போவான். அதுல்யா அவ்வளவு கொடியவள் அல்ல அவன் தன்னை விட்டு போய்விடுவானோ என்கிற பயமே அவனை இறுக்கி பிடிக்க வைக்கிறது. மற்றபடி அவளும் தவித்து தான் போயிருந்தாள். அவனுக்கு தண்டனை தருவதாய் எண்ணி தனக்கே அவள் தண்டனை கொடுத்திருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
ஒவ்வொரு முறையும் போனை எடுப்பாள், பின் முன்தினம் நடந்தது அவளுக்கு நினைவுக்கு வர போனை தூர வைத்துவிடுவாள். நேற்று ஆதி பார்க்கை விட்டு கிளம்பிய நொடி அதுல்யா அவனை பார்த்து கூப்பிட்டும் அவன் திரும்பி பார்க்காமல் சென்று விட்டான் என்பதே பெருத்த ஏமாற்றமாய் அவளுக்கு இருந்தது. ஏன் அவன் அங்கிருந்து கிளம்பி சென்றான் என்பதெல்லாம் யோசிப்பதே இல்லை அவளை பொறுத்தவரை கண்டும் காணாமலும் அவன் சென்று விட்டான்.அதோடில்லாமல் அவள் கால் செய்தபொழுது ஆதி அட்டென்ட் செய்யாததை அவளை அவன் தவிர்பதற்காகவே அவ்வாறு செய்கிறான் என்று எண்ணிக்கொண்டாள்.
இருவரில் குற்றம் சொல்வது? ஹ்ம்ம் .
திங்கள், பரப்பரப்பான காலை நேரம்
“அதுல் .. சாரி டி.
கொஞ்சம் கோவப்படாம என்ன நடந்துச்சுன்னு சொல்றத கேளு டா”
“….”
“அதுல் … ஏன்டி இப்போ கம்யுனிகேட்டர க்ளோஸ் பண்ற ?? இப்போ என்ன ஆகிபோச்சு?”
“….”
“அதுல் … ஏன்டி இப்போ கம்யுனிகேட்டர க்ளோஸ் பண்ற ?? இப்போ என்ன ஆகிபோச்சு?”
ஊகூம் எதற்குமே அதுல்யா அசைந்து கொடுக்கவில்லை.அப்பறம் என்ன ? வழக்கம் போல் ஆதி திட்டி , கெஞ்சி, கொஞ்சி விஷயத்தை சொல்லி ஒருவழியாக சமாதானப்படுத்தி விட்டான். அவள் ஒரு உம்மா ஸ்மைலி போட்ட பிறகு தான் ஆதிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
“இவளை சமாதானப்படுதுறது பெரும் பாடா இருக்கும் போல !! பேசாம பொண்ணுங்கள சமாதானப்படுத்துவது எப்படின்னு நானே கிளாஸ் எடுக்கலாம் போல , நல்ல கல்லா கட்டும் ” என்று நினைத்தபடி சிரித்துக்கொண்டான் ஆதி. சில மணிநேரங்களில் இந்த சிரிப்பு உரு தெரியாமல் அழிந்திருக்கும் என்பதை ஆதி அப்பொழுது அறிந்திருக்கவில்லை .
அதுல்யா கொஞ்சம், இல்லை இல்லை ரொம்பவே சென்சிடிவானவள் ஒரு கடுஞ்சொல்லை அவளால் பொறுத்துக்கொள்ளவோ அல்லது சிறு ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளவோ அவளால் இயலாது . பெற்றோருக்கு ஒரே பெண்ணாய் அவள் பிறந்த பலன் தான் இது. மற்றவர்களிடம் அவள் எதிர்பார்க்கும் அவளுக்கேற்ற பெர்பெக்ட்னசை ஆதியிடம் சற்று அளவுக்கதிகமாக எதிர் பார்ப்பது நியாயமே !!
“என்ன டா பண்ணற”
“வேற என்ன வேலை தான் ”
“ஹ்ம்ம் ”
“நீ என்ன பண்ற ?”
“அதே தான் …”
“..”
“பிஸியா டா ..”
“ஆமாம் டி கொஞ்சம் டெலிவரபல்ஸ் பெண்டிங் இருந்ததால எஸ்கலேசன் ஆய்டுச்சு, முடிச்சே ஆகணும்.”
“ஹ்ம்ம் சரி ”
…
“நான் உன்னை ரொம்ப தொந்தரவு பண்றேனா ?”
“அப்படி எல்லாம் இல்ல டி”
“அப்பறம் ஏன் பேசவே மாட்டேன்குற”
“வேலை டி வேற ஒன்னும் இல்ல .. ம்ம் சொல்லு ”
“இல்ல நீ முன்ன மாதிரி பேச மாட்டேன்குற .. நல்லாவே தெரியுது .. நான் உன்ன தொல்லை பண்ற மாதிரி இருக்கு..”
….
“என்னடா பதில் சொல்லவே மாட்டேன்குற”
“என்னடி சொல்லறது ?”
“ஏன் சொல்றதுக்கு ஒன்னுமே இல்லையா ?”
….
“ஏன்டா இப்படி படுத்துற , என்கிட்ட உனக்கு பேச பிடிக்கலையா ”
“ச்சு ஹய்யோ நீ தான் டி என்னை படுத்துற, சொன்னேன்ல எஸ்கலேசன்னு, அப்பறம் என்ன லூசு மாதிரி தொண தொணனு. ஒவ்வொரு தடவையும் உங்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது , அதோட இப்படி கம்யுனிகேட்டர்ல சும்மா நசநசனு.. லீட் பாத்துகிட்டு இருக்கும்போது …”
“ச்சே எப்படி பேசுற..”
“என்னால வளவளனு பிங் பண்ணி கிட்டு இருக்க முடியாது, புரிஞ்சிக்கோ இல்லனா நௌ ப்ளீஸ் கெட் லாஸ்ட்!!!”
“உன்னோட இந்த பதிலுக்கு ரொம்ப நன்றி ”
“வேற என்ன வேலை தான் ”
“ஹ்ம்ம் ”
“நீ என்ன பண்ற ?”
“அதே தான் …”
“..”
“பிஸியா டா ..”
“ஆமாம் டி கொஞ்சம் டெலிவரபல்ஸ் பெண்டிங் இருந்ததால எஸ்கலேசன் ஆய்டுச்சு, முடிச்சே ஆகணும்.”
“ஹ்ம்ம் சரி ”
…
“நான் உன்னை ரொம்ப தொந்தரவு பண்றேனா ?”
“அப்படி எல்லாம் இல்ல டி”
“அப்பறம் ஏன் பேசவே மாட்டேன்குற”
“வேலை டி வேற ஒன்னும் இல்ல .. ம்ம் சொல்லு ”
“இல்ல நீ முன்ன மாதிரி பேச மாட்டேன்குற .. நல்லாவே தெரியுது .. நான் உன்ன தொல்லை பண்ற மாதிரி இருக்கு..”
….
“என்னடா பதில் சொல்லவே மாட்டேன்குற”
“என்னடி சொல்லறது ?”
“ஏன் சொல்றதுக்கு ஒன்னுமே இல்லையா ?”
….
“ஏன்டா இப்படி படுத்துற , என்கிட்ட உனக்கு பேச பிடிக்கலையா ”
“ச்சு ஹய்யோ நீ தான் டி என்னை படுத்துற, சொன்னேன்ல எஸ்கலேசன்னு, அப்பறம் என்ன லூசு மாதிரி தொண தொணனு. ஒவ்வொரு தடவையும் உங்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியாது , அதோட இப்படி கம்யுனிகேட்டர்ல சும்மா நசநசனு.. லீட் பாத்துகிட்டு இருக்கும்போது …”
“ச்சே எப்படி பேசுற..”
“என்னால வளவளனு பிங் பண்ணி கிட்டு இருக்க முடியாது, புரிஞ்சிக்கோ இல்லனா நௌ ப்ளீஸ் கெட் லாஸ்ட்!!!”
“உன்னோட இந்த பதிலுக்கு ரொம்ப நன்றி ”
அவனின் பதிலில் அதிர்ந்து போயிருந்த அதுல்யாவின் கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்து இருந்தது. எவ்வளவு கொடுமையான வார்த்தையை சொல்லி விட்டான் . அந்த வார்த்தையையே நினைத்து நினைத்து மருகி கொண்டிருந்தாள். ஒய்வு அறைக்கு சென்று அடக்கி வைத்திருந்த அழுகையை கொட்டிதீர்த்து விட்டாள்.அந்த வார்த்தை அவள் நினைவுக்கு வர வர தேம்பல் அதிகமாயிற்று. ஒரு வழியாக அழுகையை அடக்கி கொண்ட பொழுதும் ஆதி கூறிய கடைசி வார்த்தைகள் அவள் மனதை சுட்டெரித்துகொண்டே இருந்தது.
ஒரு முடிவுக்கு வந்தவளாக முகத்தை கழுவிக்கொண்டு , விடு விடுவென படிகளில் இறங்கி இரண்டாம் மாடியில் ஆதியின் இடத்தை தேடி சென்றாள்.
நேரம் வரும் காத்திருப்போம்…..

No comments:
Post a Comment