நேற்று இரவு அம்மாவை அழைத்து வர மாம்பலம் ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தேன்.ரயில் வர தாமதமானதால், அப்படியே ரெங்கநாதன் தெருவில் இறங்கி நடக்க தொடங்கினேன், இரவு ஒன்பதரை மணிக்கு கூட மிச்ச சொச்ச கூட்டம் கடைகளை மொய்த்து கொண்டிருந்தது. எதையும் வாங்கும் எண்ணமில்லை என்று சொல்லவதை விட வாங்க காசில்லை என்று சொல்லவே விரும்புகிறேன். அப்படியே காலாற நடந்தபோது ஒரு தாய் தன் 12 வயதிருக்கும் மகனை அதட்டி கொண்டே பின்னே சென்றார்,
"டேய் வாட்ச் தானே வாடா வாங்கித்தரேன் "
"வேண்டாம் போ"
"அட வா தம்பி அதான் வாங்கி தரேன்னு சொல்றேன்ல"
"வேண்டாம்னு சொல்றேன்ல விடு, முதல்ல கேட்டப்ப வாங்கி தரல்லல அப்பறம் என்ன ? வேண்டாம் போ "
உரையாடல் காதுகளுக்கு எட்டாத தூரம் சென்றுவிட்டிருந்தது ... மனம் பின்னோக்கி நினைவலைகளுக்குள் சென்றது... இதே போல் என் அம்மா என் பின்னே பாசத்தோடு அதட்டிக்கொண்டு வந்தார்..
ஹ்ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.. இப்பொழுதெல்லாம் எதையும் கேட்டு வாங்க வேண்டிய அவசியம் இருபதில்லை.. விரும்பியதை விரும்பாததயோ வாங்கி கொள்கிறேன், அத்யாவசியமா என்று கூட நினப்பதில்லை... புதிதாக எதாவது வாங்கினால், கூட அம்மாவே இது புதியதா என்று கேட்கும் வரை சொல்லவதுமில்லை, அல்லது சொல்ல கூட நேரமில்லாத நிலை.
வரட்டு பிடிவாதத்துடன் முன்னே முறுக்கி கொண்டு சென்ற என்னை அதட்டி கூப்பிட்ட அம்மாவின் குரலை ரயில் ஓசை கலைத்துச் சென்றது

No comments:
Post a Comment