சில விஷயத்துல நமக்கு வர எரிச்சல கண்டிப்பா அடக்கவே முடியாது
1 ). சில நேரத்துல ரொம்ப முக்கியமா எதாவது தேடிகிட்டு இருப்போம்… ஆனா அது மட்டும் கிடைக்கவே கிடைக்காது அப்போ வரும் பாருங்க எரிச்சல்… அதுவும் முக்கியமா காலைல அவசர அவசரமா கெளம்பும்போது தான் ஊக்கு கண்டிப்பா கண்ல சிக்காது… ஆனா வேற எதாவது பொருள் தேடும்போது டஜன் டஜனா கிடைக்கும் அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
2 ). ஒரு காலத்துல 570 பஸ்க்கு வெயிட் பண்ணும்போது, ஒரு 570 பஸ் கூட வராது… வரிசையா 19b தான் வரும்.. ஆனா இப்போ 19b க்கு வெயிட் பண்ணினா வரிசையா 570 தான் வரும்.. அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
3 ). 8 மணி பஸ் க்கு ஏழு ஐம்பதுக்கே போய் நின்னா கண்டிப்பா பஸ் எட்டேகாலுக்கு தான் வரும்.. சரி பஸ் லேட்டா தானே வருதுன்னு எட்டு அஞ்சுக்கு போனா பஸ் ஏழு ஐம்பத்தியொன்பதுக்கே போய்டும்.. ஏன் இப்படி.. இல்ல ஏன் இப்படி :@ :@ :@
4). ரெண்டு வாரம் துணி தொவைக்காம சேத்து வச்சி மொத்தமா ஞாயத்துகிழம உக்காந்து மாங்கு மாங்கு னு தொவைச்சா… மழை போட்டி போட்டுக்கிட்டு வெளுதுக்கட்டும்போது எரிச்சல் வரும் பாருங்க பிளான் பண்ணி தான் உசுர வாங்குமோ இந்த மழை :@ :@ :@
5 ). புது டிரஸ் போட்டுக்கிட்டு சீன் போடலாம் னு ப்ளான் பண்ணி போட்டா.. என்னைக்கும் எந்த டிரஸ்லயும் மாட்டாத பாத்ரூம் கதவு ஆணி கண்டிப்பா புது டிரஸ்ச மாட்டி இழுக்கும்… ஆணிய !@#$%^& வேணாம் :@ :@ :@
6 ). காலைல 9 ஸ்டேடஸ் கால்ல முக்கியமா எதாவது சொல்லவேண்டியது இருக்கும் ஆனா பஸ் கண்டிப்பா ஒன்பதரைக்கு தான் போகும்.. கடவுளே இன்னைக்கு ஸ்டேடஸ் கால எப்படியாவது டபாய்ச்சிடனும்னு நினைக்கிற நாள்ல தான் பஸ் 9 மணிக்கே ஆபிஸ் போய்டும்.. அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
7 ). கைல காசு இருக்கும்போதெல்லாம் இந்த மசாலா பூரி சாப்பிட ஆசை வராதுங்க.. ஆனா என்னைக்காவது ஆசையா மசாலா பூரி சாப்பிடலாம்னு போய் நின்னு பர்ஸ தொறந்தா 2 ரூபா 50 பைசாக்கு மேல தேராது.. அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
8 ). எல்லா சனி கிழமையும் ஆபிஸ் போயிட்டு எதாவது ஒரு சனி கிழம எங்கயும் ஊரு சுத்தாம ஜாலியா ரூம்ல ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைக்கிற அன்னைக்கு கண்டிப்பா கரண்ட் முழு நாளும் இருக்காதுங்க.. சாயங்காலம் ஆறு மணிக்கு தான் கண்டிப்பா கரண்ட் வரும்…அப்போ வரும் பாருங்க எரிச்சல் :@ :@ :@
ஹ்ம்ம் என்ன பண்றது எல்லாம் நேரம்… விதி வலியது… :@ :@ :@
அது என்ன மசாலா பூரி? அது எப்படி இருக்கும்ம்?
ReplyDelete