Monday, 28 October 2013

இரவு மீள்தல்





இந்த இரவில் 
இன்னும் அன்பிற்கினிய இருவர் பிரியாமல் இருக்க வேண்டும் 
இன்னும் கூடடையாத பறவை திரும்பிட வேண்டும் 
இன்னமொரு தெரு நாய் 
அடிபடாமல் இருக்க வேண்டும் 
இன்னும் முடியாமல் இருக்கும் தலையணை நனைதல்கள் 
உறைந்திட வேண்டும் 
இன்னுமொரு தற்கொலை நடவாமல் இருக்க வேண்டும் 
இன்னும் பசியடங்காமல் இரத்த தீற்றல்களுடன் அலையும் ஓநாய்கள் 
அமைதியடைய வேண்டும் 
பேரன்புடன் இரட்சிக்கும் சாத்தானே 
இந்த இரவு மட்டும் இரவாகவே இருந்திட வேண்டும்

1 comment:

  1. நன்றாக இருக்கிறது,,, எழுத்தை வாசிப்பு வளப்படுத்துவதுபோல , வாசிப்பை எழுத்து வளப்படுத்தும் என்பது என் எண்ணம்,,,எனவே தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete